தமிழ்நாடு சட்டமன்றப்பேரவைக்கு தங்களது போக்குவரத்திற்காக கார்கள் வழங்கப்பட வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பேரவைக்கு ஏற்கெனவே கடந்த முறை காலணிகள் இன்றி எளிய தோற்றத்தில் வந்த கே.வி. குப்பம் தொகுதி தவெக எம்.எல்.ஏ தென்றல் குமாரிடம் சுமார் ரூ.2.7 கோடி மதிப்பிலான சொத்துகள் இருக்கும் நிலையில், மற்றொரு தவெக எம்.எல்.ஏ சபரி ஐங்கரனிடம் ரூ.5 லட்சம் மதிப்பிலான டாடா காரும், எம்.எல்.ஏ சண்முகனிடம் 4 சொகுசு கார்களும் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சொந்தமாகப் போதுமான வாகன வசதிகளும், கோடி கணக்கில் சொத்துகளும் வைத்திருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதற்காக மக்கள் வரிப்பணத்தில் புதிய கார்கள் வழங்கப்பட வேண்டும் எனக் கேள்வி எழுப்பி, இத்தகையக் கோரிக்கைகளுக்கு நெட்டிசன்கள் தங்களது கண்டனங்களையும் சமூக வலைதளங்களில் கடுமையாகப் பதிவிட்டு வருகின்றனர்.
