அதிமுகவிற்குள் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை இணைப்பதற்கான திரைமறைவு முயற்சிகளை எடப்பாடி பழனிசாமி தீவிரப்படுத்தி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்டுள்ள பல்வேறு வழக்குகளைத் தொடர்ந்து, அவரை இனியும் கட்சி சுமக்க முடியாது என திமுக தலைமை முடிவெடுத்துவிட்டதாகக் கூறப்படும் நிலையில், இந்தச் சூழலைச் சாதகமாகப் பயன்படுத்தி அவரை மீண்டும் அதிமுகவிற்குள் கொண்டு வர சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கொங்கு மண்டலத்தில் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வரும் எஸ்பி வேலுமணியின் செல்வாக்கைக் குறைத்து அவரை அரசியல் ரீதியாக ஓரங்கட்டுவதற்கு, செந்தில் பாலாஜியின் வரவு தனக்குப் பெரும் பலமாக அமையும் என எடப்பாடி பழனிசாமி திட்டமிடுவதாகவும் உடன்பிறப்புகள் மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் மத்தியில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
