எம்.எல்.ஏ-க்களுக்கு கார் மட்டுமில்லை… மாதம் ரூ.1.80 லட்சமா?… என்னென்ன படிகள் உயர்த்தப்பட்டுள்ளன?…. இதோ முழு விவரம்….!

By Nanthini on ஆவணி 20, 2026

Spread the love

தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் (MLA) மாதாந்திர ஊதியம் மற்றும் படிகள் உயர்த்தப்பட்டு புதிய விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, உறுப்பினர்களின் அடிப்படை ஊதியம் ரூ.30,000, மாதாந்திரப் படி ரூ.10,000, தொகுதிப் படி ரூ.25,000, அஞ்சல் படி ரூ.2,500, தொலைபேசி படி ரூ.7,500, தொகுப்புப் படி ரூ.5,000 மற்றும் உதவியாளர் படி ரூ.25,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்பு ரூ.25,000-ஆக இருந்த வாகனப் படி தற்போது ரூ.75,000-ஆக உயர்த்தப்பட்டதை அடுத்து, வழக்கமாக வழங்கப்பட்டு வந்த மொத்த ஊதியம் ரூ.1,05,000-லிருந்து உயர்ந்து இனி மாதம் ரூ.1,80,000 வழங்கப்படவுள்ளது.