தவெகவை இரண்டாக உடைக்க சதி?…. சட்டமன்றத்தில் போட்டுடைத்த அமைச்சர் N. ஆனந்த்…. அடுத்த பரபரப்பு…!

By Nanthini on ஆவணி 20, 2026

Spread the love

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தை இரண்டாக உடைக்கச் சிலர் தீவிர முயற்சி மேற்கொண்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய அவர், என்னதான் சூழ்ச்சிகள் செய்து அழுத்தம் கொடுத்தாலும் தவெகவின் தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் எவரையும் மாற்றுக் கட்சியினரால் பிரிக்கவோ அல்லது தன் பக்கம் இழுக்கவோ முடியாது என மிக அழுத்தமாகச் சவால் விடுத்தார்.

மேலும் தவெக தொண்டர்களின் மாறாத அசைக்க முடியாத விசுவாசத்தை விவரிக்கும் வகையில், ஒரு தட்டில் ₹2 கோடி ரூபாய் பணத்தையும், மறு தட்டில் தவெக தலைவர் விஜய்யின் புகைப்படத்தையும் வைத்தால், எங்கள் தொண்டர்கள் பணத்தை ஏறிட்டும் பார்க்காமல் முதலமைச்சர் விஜய்யின் புகைப்படத்தைத் தான் பெருமையுடன் தேர்வு செய்வார்கள் என உணர்ச்சிப்பூர்வமாகக் கூறி எதிர்த்தரப்பினரின் அரசியல் கணக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.