புதிய அரசியல், தூய்மையான அரசியல் என்ற முழக்கங்களோடு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தை தற்போது பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவினர் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி, கட்சியை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கத் தொடங்கிவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அதிமுகவிலிருந்து தவெகவிற்குத் தாவிய செங்கோட்டையனுக்கு உடனடியாக அமைச்சர் பதவி வழங்கப்பட்ட நிலையில், அண்மையில் கட்சியில் இணைந்த “இரண்டு விஜயபாஸ்கர்களும்” தற்போது தங்களுக்குரிய முக்கியப் பதவிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்; இதனால் கட்சியின் தொடக்கக் காலத்திலிருந்தே தவெகவிற்காகத் தங்களது உழைப்பையும், வியர்வையையும் சிந்திய அடிமட்ட உண்மையான நிர்வாகிகளுக்குக் கிடைக்க வேண்டிய உரிய அங்கீகாரங்களும் பதவிகளும், நேற்று வந்த அதிமுகவினரால் திட்டமிட்டுப் பறிக்கப்படுவதாகக் கூறி தவெகவின் உட்கட்சி வட்டாரங்களிலேயே தற்போது பெரும் அதிருப்தியும் சலசலப்பும் வெடித்துள்ளதாக அரசியல் அரங்கம் பரபரப்பாகப் பேசுகிறது.
