தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம் முழுவதும் மதுபானம் கொண்டு செல்ல அனுமதி (உரிமம்) பெற்றுத் தருவதாகக் கூறி, லாரி உரிமையாளர் ஒருவரிடம் மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் அவர்களின் பெயரைப் பயன்படுத்தி ரூ.22 லட்சம் மோசடி செய்த அருப்புக்கோட்டையைச் சேர்ந்த தவெக நிர்வாகிகள் கார்த்திகேயன் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களின் பேச்சில் சந்தேகமடைந்த அந்த லாரி உரிமையாளர், நேரடியாக அமைச்சரையே தொடர்புகொண்டு நிலவரத்தைக் கூறி புகாரளித்ததைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த மோசடி அம்பலமாகி இருவரும் தற்போது கம்பிகளுக்குப் பின்னால் அடைக்கப்பட்டுள்ளனர்.
