முதல்வர் இதை செய்யாவிட்டால்.. நான் மக்களோடு நேரில் வருவேன்.. ஸ்டாலினுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்த விஜய்..!

By Nanthini on ஆடி 4, 2025

Spread the love

இன்று தமிழக வெற்றிக் கழக செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தமிழக முழுவதும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக  முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் வேட்பாளராக தவெக கட்சியின் தலைவர் விஜய் அறிவிக்கப்பட்டுள்ளார்.  இதனைத்தொடர்ந்து பேசிய விஜய், “திமுக- பாஜகவுடன் நேரடியாகவோ மறைமுகமவோ கூட்டணி இல்லை. சுயநல அரசியல் லாபங்களுக்காக பாஜகவுடன் கூட்டணி போக, திமுகவோ அதிமுகவோ இல்லை.

தமிழக வெற்றிக் கழகம். கொள்கை எதிரிகள், பிளவுவாத சக்திகளுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ என்றுமே கூட்டணி கிடையாது. கூட்டணி என்றால் அது தவெக தலைமையில் மட்டும் தான். தமிழ்நாட்டில் பாஜக ஒருபோதும் வெற்றி பெற முடியாது.  பரந்தூர் மக்களை அதிகாரிகளோ, அமைச்சர்களோ சந்திக்காமல் முதல்வர் ஸ்டாலினை நேரில் சென்று சந்திக்க வேண்டும். இல்லையென்றால் பரந்தூர் மக்களை அழைத்து வந்து தலைமைச் செயலகத்தில் ஸ்டாலினை சந்திக்கும் சூழல் உண்டாகும்.

   

தலைமைச் செயலகத்தில் சந்திக்கும் சூழல் வந்தால் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். 1500 குடும்பம் என்றால் உங்களுக்கு அவ்வளவு இளக்காரமாக போய்விட்டதா. அவர்களும் மனிதர்கள் தான். பரந்தூரில் ஏர்போர்ட் வருமா வராதா என்று சொல்லாமல் மக்களுக்கு பாதிப்பு வராது என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம் என்று விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.