சூப்பர் ஹிட் சீரியலை விரைவில் முடிவுக்கு கொண்டு வரும் சன் டிவி.. ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்..!

By Nanthini on ஆடி 4, 2025

Spread the love

தமிழ் சின்ன திரையை பொருத்தவரையில் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே நீங்காத இடம் பிடித்துள்ள சேனல் தான் சன் டிவி. மற்ற சேனல்களுடன் ஒப்பிடும்போது சன் டிவியில் காலத்திற்கு ஏற்றவாறு ரசிகர்களின் மனதை புரிந்து கொண்டு புதுப்புது கதை களத்துடன் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அது மட்டுமல்லாமல் நீண்ட வருடங்களாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல்களையும் விரைவில் முடிவுக்கு கொண்டு வந்து புதுப்புது சீரியல்களை சன் டிவி அடுத்தடுத்து கலைஞருக்கு வருகிறது. சின்னத்திரையில் டிஆர்பி யில் நாங்க தான் எப்போதும் கெத்து என்று சொல்வது போல டாப் ஐந்து இடங்களை சன் டிவி சீரியல்கள் ஆக்கிரமித்து விடுகின்றன.

செவ்வந்தி (தொலைக்காட்சித் தொடர்) - விக்கிபீடியா

   

சன் தொலைக்காட்சி ஆரம்பித்த நாள் முதல் புத்தம் புதிய தொடர்கள் மற்றும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட தொடர்கள் என நிறைய ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் மற்றும் ஜீ தமிழில் நிறைய தொடர்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் சன் டிவி சீரியல்களை அடித்துக் கொள்ள முடியாது. இப்போது எல்லா தொலைக்காட்சிகளிலும் விதவிதமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருவதால் டிஆர்பி போர் அதிகமாகிவிட்டது.

   

Sevvanthi serial: செவ்வந்தி சீரியலில், திவ்யாவுடன் மோதும் நட்சத்திரா..  சபாஷ் சரியான போட்டி! | Serial Actress Natchathra joined in Sun tv's Sevvanthi  serial - Tamil Filmibeat

 

இதனால் கொஞ்சம் டல்லடிக்கும் தொடர்களை முடித்து உடனே புதிய சீரியல்களை களமிறக்கி விடுகின்றனர். தற்போது சன் டிவியில் விரைவில் வரும் முக்கிய சீரியல் முடிவுக்கு வர உள்ளது. அதாவது ரசிகர்களின் ஃபேவரைட் தொடராக இருக்கும் செவ்வந்தி சீரியல் விரைவில் கிளைமாக்ஸ் எட்ட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.