இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடி மக்களுக்கும் ரேஷன் கார்டு மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் ஒவ்வொரு மாநிலத்திலும் அரசு சார்பில் ஏராளமான சலுகைகள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகின்றன. அரசின் சலுகைகளை பெறுவதற்கு ரேஷன் கார்டு என்பது அவசியமாகும். இப்படியான நிலையில் ஜூன் 30-ஆம் தேதிக்குள் கைவிரல் ரேகை பதியாத ரேஷன் அட்டைகள் செல்லாது என்ற செய்தி இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.
குறிப்பாக ரேஷன் உதவிகள் கிடைக்க கேஒய்சி சரி பார்ப்பது அவசியம் என்றும் ஆதார், மொபைல் எண், கைரேகை மற்றும் இறந்தவர்கள் பெயர் நீக்கம் போன்றவற்றை அப்டேட் செய்யாவிட்டால் ரேஷன் கார்டு செல்லாது என்றும் கூறப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் இது தவறான செய்தி என்றும் மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என TN Fact Check விளக்கமளித்துள்ளது.
