“கோமாளி கூட்டமா? உங்க அப்பன் வீட்டு காசா?”…. “Copy-Paste பண்ணையாரே”… ஸ்டாலினை கிழித்துத் தொங்கவிட்ட தவெக IT Wing…. பரபரக்கும் அரசியல் களம்….!

By Nanthini on ஐப்பசி 4, 2026

Spread the love

தமிழக அரசியலில் திமுகவிற்கும், ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இடையே சமூக வலைதளங்களிலும் பிரச்சார மேடைகளிலும் சொல்லம்புகள் பாயத் தொடங்கியுள்ளன. மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெகவை “கோமாளிக் கூட்டம்” என விமர்சித்ததோடு, அவர்கள் திமுகவை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்றும் சாடினார். மேலும், அரசின் நலத்திட்டங்களை தவெக தலைவர் விஜய் விமர்சிப்பதற்குப் பதிலடி கொடுத்த ஸ்டாலின், முன்னாள் தலைவர்கள் கொண்டுவந்த திட்டங்கள் அனைத்தும் அவர்கள் சொந்தக் காசிலா செயல்படுத்தப்பட்டது எனக் கேள்வி எழுப்பியதுடன், விஜய்யின் தங்க மோதிரம் வழங்கும் நிகழ்வையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் இந்த விமர்சனத்திற்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணி (IT Wing) மிகக் கடுமையான சொற்களில் பதிலடி கொடுத்துள்ளது. “சொத்து நகைச்சுவை பேசி மதுரை முத்துவிற்கே போட்டியாளராக மாறியுள்ள தோல்வித் தலைவரே” எனத் தொடங்கும் தவெகவின் அறிக்கை, ‘மிசா’ கைதிற்கான ஆதாரத்தைக் காட்ட மறுப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. கட்சி நிதி மற்றும் ஊழல் தொடர்பான கேள்விகள் எழும்போது திமுக உறுப்பினர்கள் சட்டமன்றத்தை விட்டு ஓட்டம் பிடிப்பதாகக் குற்றம் சாட்டிய தவெக, திமுக தலைவர் ஸ்டாலினை “ஊழல் பீரோ மன்னன்” என்றும் “Copy-Paste பண்ணையார்” என்றும் கடுமையாகச் சாடியுள்ளது.

   

மேலும், தவெக தலைவர் விஜய்யின் ஆடை வடிவமைப்பு, மேடை நடை (Ramp walk) மற்றும் தொண்டர்கள் துண்டு வீசும் பாணி உள்ளிட்ட அனைத்தையும் திமுக நகல் எடுத்துப் பயன்படுத்துவதாக தவெக ஐடி விங் சாடியுள்ளது. தந்தை பெரியாரின் பெயரைச் சொல்லிக்கொண்டே பெண்களைத் தொடர்ந்து இழிவுபடுத்தி வரும் கும்பலின் தலைவராக திமுக தலைவர் செயல்படுவதாகவும், அப்பாவின் பேனாவிற்குச் சிலை வைக்கத் துடித்தது யாருடைய அப்பா வீட்டுப் பணத்தில் என்றும் அடுக்கடுக்கான கேள்விகளைத் தவெக முன்வைத்துள்ளது.

   

சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ மற்றும் காணொளிகள் மூலம் பரப்பப்படும் அவதூறுகளுக்கு இனிவரும் உரைகளிலாவது திமுக தலைமை விளக்கமளிக்க வேண்டும் என்று தவெக வலியுறுத்தியுள்ளது. பெரியார் கொள்கைகளைப் பேசுவதாகக் கூறிக்கொண்டு ஆபாசத்தையும் அவதூறையும் பரப்புபவர்களுக்குத் தமிழ்நாட்டு மக்களும், பெண்களும், குழந்தைகளும் வரும் தேர்தலில் நிச்சயமாகத் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் தவெக தனது கண்டன அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.