தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைந்தது முதலே, அதன் பெரும்பான்மையை தக்கவைத்துக் கொள்ள பிற கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை இழுக்கும் முயற்சிகள் நடைபெறுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. குறிப்பாக, அதிமுகவின் மூத்த தலைவரான ஆர்.பி. உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர்களின் விரல் மை ஈரம் காய்வதற்கு முன்பே அவர்களுக்கு ஆஃபர் கொடுத்து தூக்கும் “குதிரை பேரம்” நடப்பதாக தொடர்ந்து பகிரங்கமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
சமீபத்தில் வாணியம்பாடி தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ சையது பாரூக் பாஷா பேசியதாகக் கூறப்படும் தகவல்களைச் சுட்டிக்காட்டிய உதயகுமார், “கோடி கோடியாக பணம் மற்றும் அமைச்சர் பதவிகள் தருவதாகக் கூறி கையெழுத்துப் பெற முயன்ற அந்த இரு நபர் யார்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், தலைமைச் செயலகம் கட்ட ரூ.1,200 கோடி ஒதுக்குவது மற்றும் தூய்மைப் பணியாளர்கள், விவசாயிகள் போராட்டம் போன்ற பல்வேறு இன்னல்களால் தவெக அரசு 115 நாட்களிலேயே மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டதாக மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆர்.பி. உதயகுமாரின் இந்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்குத் தவெக தரப்பில் பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், உதயகுமார் தினமும் வீடியோ வெளியிட்டு தனது அரசியல் இருப்பைக் காட்டிக்கொள்ள முயல்வதாக சாடியுள்ளார். மேலும், அதிமுகவை அழிவின் பாதைக்குக் கொண்டு சென்றதில் உதயகுமாருக்கு முக்கியப் பங்கு உண்டு எனக் குறிப்பிட்ட அவர், திமுகவும் அதிமுகவும் தான் பின்னணியில் இணைந்து குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க குதிரை பேரங்களிலும் ஒட்டக பேரங்களிலும் ஈடுபட்டு வருவதாகத் திருப்பித் தாக்கியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமியும் உதயநிதி ஸ்டாலினும் இணைந்து என்ன செய்கிறார்கள் என்பது உதயகுமாருக்கு நன்றாகவே தெரியும் என்றும், தொடர்ந்து இவ்வாறு பேசி வந்தால் வரவிருக்கும் உள்ளாட்சி மற்றும் கவுன்சிலர் தேர்தலில் கூட அதிமுகவிற்கு பின்னடைவு தான் ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளார். இவ்வாறாக “அந்த 2 சார் யார்?” என்ற உதயகுமாரின் அம்புக்கும், “திமுக – அதிமுக கூட்டணி பேரமே இதற்குக் காரணம்” என்ற நிர்மல் குமாரின் பதிலடிக்கும் நடுவே, இந்த குதிரை பேர சர்ச்சைக்கு முதல்வர் விஜய் சட்டமன்றத்திலோ அல்லது பொதுவெளியிலோ என்ன விளக்கம் அளிக்கப் போகிறார் என்பதை தமிழக அரசியல் களம் உற்றுநோக்கி வருகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அகில் குமார் சந்தக் என்பவர், கடந்த 2019-ஆம் ஆண்டு டெல்லியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நூர்ஷிகா…
கேரள மாநிலம் கொச்சி பொன்னுருன்னி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் பிரபல மலையாள நடிகை அதுல்யா சந்திரா, 41…
நீலகிரி மாவட்டம் பில்லூர்மட்டம் சடையன் கொம்பை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் திடீரென காணாமல் போனதாக கடந்த…
டெல்லி அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் வழித்தடம் பற்றிக் கேட்ட பெண் ஒருவர், திடீரென ஓட்டுநருடன் தகராறில் ஈடுபட்டு அவரது காலரைப்…
சென்னையை அடுத்த கொளத்தூர் ஜி.கே.எம் காலனி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கூடத்தில், அண்ணன் மற்றும் தங்கை இருவரும் மதுபோதையில்…
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் கே.ஆர்.…