தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பதிலளித்துப் பேசினார். தமது உரையின் போது, திமுக அரசின் கடந்த கால செயல்பாடுகளையும் ஊழல்களையும் கடுமையாக விமர்சித்த அவர், “செய்கிற தவறுகளையே ஒழுங்காகவும் முறையாகவும் செய்திருக்கிறார்கள். இரண்டு துறைகளின் கோப்புகளை திறந்ததற்கே இத்தனை பூதங்கள் கிளம்புகின்றன என்றால், மற்ற துறைகளின் கோப்புகளைத் திறந்தால் என்னவாகும் என்று தெரியவில்லை” என ஆவேசமாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முதல்வர், தவறு செய்பவர்களில் இரண்டு ரகம் இருப்பதாக சுட்டிக்காட்டினார். “தவறு செய்துவிட்டு மாட்டிக்கொள்பவர்கள் ஒருவகை என்றால், செய்த தவறுகளிலிருந்து தப்பிப்பது எப்படி என திட்டமிட்டு மாட்டிக்கொள்ளாமல் தவறு செய்பவர்கள் இன்னொரு வகை. நம் அரசியல் தோழர்கள் இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர்கள். திமுக இருக்கும் இடத்தில்தான் தவறுகள் நடக்கும்; தவறுகள் நடக்கும் இடத்தில்தான் திமுக இருக்கும்” என்று நேரடியாகக் குற்றம்சாட்டினார். மேலும், அரை நூற்றாண்டு காலமாக மக்களை ஏமாற்றி கட்டமைக்கப்பட்ட போலி பிம்பமும், போலி பிராண்டும் விரைவில் உடைக்கப்படும் என்று பணிவன்புடன் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்திருந்ததை சுட்டிக்காட்டிய விஜய், “மிசா” குறித்துப் பேசப்படுவது பற்றி குறிப்பிடுகையில், “மிசாவைப் பற்றிய வரலாறு எனக்கும் தெரியும். 1967-இல் அண்ணா, 1977-இல் எம்.ஜி.ஆர், 1983-இல் என்.டி.ஆர், 2026-இல் விஜய்! இயற்கையும் இறைவனும் எப்போதும் நம்ம பக்கம்தான் இருப்பார்கள். இந்த நாற்காலிக்காகவோ, அதிகாரத்திற்காகவோ நான் இங்கு வரவில்லை; மக்களுக்கு உண்மையாக நல்லது செய்யவும், நன்றிக்கடன் செலுத்தவுமே வந்துள்ளேன்” என நெகிழ்ச்சியுடன் கூறினார்.
இறுதியாக, உறுப்பினர்களின் வெட்டுத் தீர்மானங்களை திரும்பப் பெற்று மானியக் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு கேட்டுக்கொண்டார். உரையின் முடிவில், பின்வரிசையில் இருந்த உறுப்பினர்கள் நகைச்சுவையாக ‘கமெண்ட்’ அடித்ததால், முதல்வர் விஜய் பின்னால் திரும்பிப் பார்த்து புன்னகைத்தவாறே வாசித்தார். இதைக் கண்டு தவெக அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் உற்சாகமடைந்து மேஜையைத் தட்டி தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…