விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தவெக நிர்வாகி லட்சுமணன் தனது ராஜபாளையம் தொகுதிக்குள் நுழைய முயன்றால் கொலை செய்துவிடுவேன் என அமைச்சர் ஜெகதீஸ்வரி மிரட்டல் விடுப்பதாக வெளியாகியுள்ள ஆடியோ பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்து, சமீபத்தில் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகி ராஜகுருவிடம் அமைச்சர் கடிந்துகொள்வது போல அமைந்துள்ள இந்த ஆடியோவால் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அமைச்சரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கில் இதுபோன்று சோடிக்கப்பட்ட போலி ஆடியோவைப் பரப்பி வருவதாக அமைச்சரின் உதவியாளர் தரப்பில் திட்டவட்டமாக மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜகவின் அமைப்பு ரீதியான மாற்றங்களைத் தொடர்ந்து புதிய நியமனங்களை அக்கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின் அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாட்டைச்…
பால்கர் மாவட்டத்தின் போய்சார் பகுதியில் உள்ள தாராபூர் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் 'விராஜ் ப்ரொஃபைல்ஸ்' எஃகு உற்பத்தி ஆலையில் திங்கள்கிழமை…
தமிழ்நாட்டை லஞ்சம் மற்றும் ஊழலற்ற மாநிலமாக மாற்றுவதே தனது அரசின் முதன்மை இலக்கு என்று முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்…
மீரா ரோடு - பயந்தர் எல்லையில் உள்ள கோல்டன் நெஸ்ட் பகுதியில் நடந்து வரும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளில்,…
ஹைதராபாத்தின் பாலாபூர் பகுதியில் இளம்பெண் ஒருவர் தனது காதலனாலேயே கொடூரமாகக் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை…
தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த விசிக பேனரை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றியதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியினர்…