சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே 12.5 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகி பூபதி ராஜா உட்பட 6 இளைஞர்களைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். சங்ககிரி பகுதியில் தீவிர வாகன தணிக்கையின் போது பிடிபட்ட இவர்களிடமிருந்து 12.5 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட 6 பேரும் சங்ககிரி குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, அவரது உத்தரவின்படி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த பிறகு, அக்கட்சியைச் சேர்ந்தவர்களே தொடர்ச்சியாகக் கொலை, திருட்டு, பணம் பறிப்பு மற்றும் கஞ்சா கடத்தல் போன்ற பல்வேறு குற்றச் சம்பவங்களில் சிக்கி வருவது பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “கழகத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பவர்கள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கட்சித் தலைமை உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அவர்களைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும்” எனத் தீவிரத் தொண்டர்களும் சமூக ஆர்வலர்களும் தற்பொழுது வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…