அதிர்ச்சி..! சாப்பாடு தருவதாகக் கூறி தூய்மைப் பணியாளர்களைக் காலணியை எடுக்க வைத்த தவெக நிர்வாகிகள்..? வீடியோ வெளியாகி பரபரப்பு..!!

Spread the love

திருவொற்றியூர் விம்கோ நகரில் தவெக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமாரின் புதிய அலுவலகத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான எம்.ஆனந்த் கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்த விழாவில் பங்கேற்க சென்னை மற்றும் பல்வேறு தொகுதிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்காகத் திரளாகக் கூடியிருந்தனர்.

அமைச்சர் ஆனந்தை வரவேற்பதற்காக தவெகவினர் விதிமுறைகளை மீறி பல்வேறு இடங்களில் பேனர்களை அமைத்திருந்தனர். குறிப்பாக, திருவொற்றியூர் தேரடி சந்திப்பில் வைக்கப்பட்டிருந்த சுமார் 40 அடி உயர பேனர், காற்றில் சரிந்தால் விபத்து ஏற்படும் என்ற அச்சத்தைப் பொதுமக்களிடையே ஏற்படுத்தியது. மேலும், மெட்ரோ ரயில் தூண்கள், சென்ட்ரல் மீடியன் ஆகிய இடங்களில் கொடிக்கம்பங்கள் கட்டப்பட்டிருந்ததோடு, மாதவரம் விரைவு சாலையில் உள்ள பேருந்து நிழற்குடையை முற்றிலுமாக மறைத்து பேனர்கள் வைக்கப்பட்டதால் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் கடும் இடையூறு ஏற்பட்டது.

இந்த விழாவின் போது, அமைச்சர் வருவதற்குச் சற்று நேரத்திற்கு முன்பாக அலுவலகத்தின் உள்ளே விஐபிகளின் காலணிகள் ஏராளமாக இருந்தன. அமைச்சர் வந்தால் இடையூறாக இருக்கும் எனக் கருதிய தவெக நிர்வாகிகள், அங்கு உணவு சாப்பிட வந்திருந்த தூய்மைப் பணியாளர்களை அழைத்து அக்காலணிகளை வெளியே எடுத்துப் போடுமாறு கூறினர். அதிகாரத்திற்கும் அமைச்சர் நிகழ்ச்சிக்கும் பயந்து தூய்மைப் பணியாளர்கள் காலணிகளை வெளியே எடுத்து வைத்தாலும், “சாப்பாடு தருகிறோம் என்று வரவழைத்து எங்களை காலணி எடுக்க வைக்கிறார்களே” என அவர்கள் மனவேதனையுடன் புலம்பினர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.

Soundarya

Recent Posts

அதிகாலையில் பயங்கரம்…!! ஆட்டோ டிரைவரை சுற்றி வளைத்த கும்பல்… ஒரே நாளில் இரட்டை கொலைகள்…. பின்னணி என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என் வாழ்க்கையையே ஏமாத்திட்டியா?… ரயிலில் அம்பலமான மனைவியின்… ரகசிய முகத்தால் உடைந்த கணவன்…!

ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…

2 மணத்தியாலங்கள் ago

“காட்டுக்குள்ள அரசு வேலை நடக்குதா…?” வேறொருவர் மனைவியை அழைத்து சென்ற பஞ்சாயத்து தலைவர்…. பின் தொடர்ந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னால துக்கத்தைத் தாங்க முடியல… தற்கொலை பண்ணிக்க தோணுது… பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கண்ணீர் வீடியோ… மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…

2 மணத்தியாலங்கள் ago

“என்னை விடுங்க…” புல் அறுக்க சென்ற பெண்… கை,கால்களை பிடித்து அடிக்கும் வாலிபர்கள்… கதறி துடித்த சோகம்… பதற வைக்கும் வீடியோ வைரல்…!!

சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ கடவுளே… காது சியாம்ஜி தரிசனம் முடிந்து… திரும்பியபோது நேர்ந்த கோர விபத்து… காவலரின் சகோதரன் உட்பட 6 பேர் பரிதாப பலி… கதற வைக்கும் சோகம்…!!

குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…

3 மணத்தியாலங்கள் ago