“பத்த வெச்சு புகை இழுத்தா பவர் கிக்” CM சார் நீங்க செஞ்ச பாவத்துக்கு.. 3 இல்ல 300 கி.மீ ஓடினாலும் தீராது… CM விஜய்க்கு ராஜேஸ்வரிபிரியா சாட்டையடி..!!

Spread the love

சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் விஜய், சென்னையில் நடைபெற்ற போதைப்பொருள் எதிர்ப்பு மாரத்தான் போட்டியைத் தொடங்கி வைத்து, தாமும் சுமார் 3 கி.மீ தூரம் ஓடினார். விழா மேடையில் “ஸ்போர்ட்ஸ எடு ட்ரக்ஸ்-அ விடு” என்ற வாசகத்தை எழுதி அவர் விழிப்புணர்வை ஏற்படுத்திய நிலையில், இந்தியாவிலேயே மாரத்தானில் நீண்ட தூரம் ஓடிய தற்போதைய முதல்வர் இவர்தான் என்று அமைச்சர் ஆதவ் பாராட்டிப் பேசினார். இதனால் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களும் ரசிகர்களும் மிகுந்த உற்சாகமடைந்தனர்.

இருப்பினும், முதல்வர் விஜய்யின் இந்த நடவடிக்கைக்குப் பின்னால் இருக்கும் முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டி சமூக வலைத்தளங்களிலும் அரசியல் தளங்களிலும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவர் திரையில் போதை வஸ்துக்களைப் பயன்படுத்துவது போன்ற காட்சிகளிலும், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் போதைப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலான பாடல்களிலும் நடித்துள்ளதை விமர்சகர்கள் நினைவுபடுத்துகின்றனர். நிஜத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முதல்வர், திரையில் அதற்கு மாறாகச் செயல்பட்டதை மறுக்க முடியுமா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.

இதனை முன்வைத்து அனைத்து மக்கள் அரசியல் கட்சித் தலைவர் ராஜேஸ்வரிபிரியா வெளியிட்டுள்ள அறிக்கையில், “பத்த வெச்சு புகை இழுத்தா பவர் கிக்” போன்ற பாடல்கள் மூலம் இளைஞர்களிடம் போதைப் பழக்கத்தை ஊக்குவித்த பாவத்திற்கு நீங்கள் 3 கி.மீ அல்ல, 3,000 கி.மீ ஓடினாலும் தீர்வு கிடைக்காது என்று சாடியுள்ளார். பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் இந்தச் செயலுக்கு, சமூகத்தை சீரழித்ததற்காக முதலில் பொதுவெளியில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அதன் பிறகே போதைக்கு எதிராகப் பேசும் தகுதியைப் பெற முடியும் என்றும் அவர் தனது கண்டனத்தை உரக்கப் பதிவு செய்துள்ளார்.

Soundarya

Recent Posts

அடச்சீ… நீயெல்லாம் மனுஷனா… ஈரமான சாலையில் வழுக்கி விழுந்த… பைக்கர் மீது ஏறி இறங்கி நிற்காமல்… பறந்த கொடூர எஸ்யூவி… நெஞ்சை நடுங்க வைக்கும் CCTV காட்சி…!

ஈத்கா மோர் பகுதியில் செப்டம்பர் 2ஆம் தேதி அதிகாலையில், ஈரமான சாலையில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்த…

15 minutes ago

“சாக்கடையில் விழுந்ததால் சண்டை…” 9 வயது சிறுவனை கத்தியால் குத்தி கொன்ற 11 வயது சிறுவன்…! நெஞ்சை உலுக்கிய கொடூர சம்பவம்…!!

உத்தரகாண்ட் மாநிலம் ஜஸ்பூர் பகுதியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது மனதை உலுக்கும் கொடூரச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. 9 வயதுச்…

24 minutes ago

என் வாழ்க்கை அவ்வளவுதான்… சாஸ்திரி பாலத்தில் இளைஞர் எடுத்த பகீர் முடிவு… இணையத்தை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

பிரயாக்ராஜில் உள்ள சாஸ்திரி பாலத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் மிகுந்த மன வேதனையையும் சிந்தனையையும் தருகிறது. எதிர்காலம் குறித்த கனவுகளுடன்…

26 minutes ago

“7 ஆண்டுகள் குடும்ப வாழ்க்கை… 3 குழந்தைகள்…” மனைவி, மாமியாருக்கு சரமாரியாக கத்திக்குத்து… கணவரின் வெறிச்செயல்… பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ராஜன்னா சிரிசில்லா மாவட்டம் எல்லாரெட்டிபேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட படி்ரா கிராமத்தில் நடுக்கத்தை ஏற்படுத்தும் கொடூரக் கொலைச் சம்பவம்…

28 minutes ago