“நாங்க அணில் குஞ்சுகள் கிடையாது, அக்னி குஞ்சுகள்” சீமானுக்கு பதிலடி கொடுத்த TVK பெண் தொண்டர்..!!

By Soundarya on ஆவணி 21, 2025

Spread the love

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது .இந்த கூட்டத்தில் பேசிய சீமான், தவெக தொண்டர்களிடம் உங்களுடைய கொள்கை என்னவென்று கேட்டால் தளபதி தளபதி என்று கத்துகிறார்கள். எனக்கு என்னவோ அது தலைவிதி தலைவிதி என்று கேட்கிறது.

சரி எதற்கு வந்தீர்கள் என்று கேட்டால் TVK TVK  என்று கத்துகிறார்கள், அதை கேட்கும் பொழுது டீ விக்கவா  இவ்வளவு பேர் கிளம்பி வந்திருக்கிறீர்கள்? என்று எனக்கு தோணுகிறது. புலி வேட்டைக்கு செல்லும் வழியில் அணில்கள் குறுக்கே ஓடுகிறது. பத்திரமாக மரத்தில் ஏறி இருங்கள். அணிலே ஓரமாய் போய் விளையாடு என்று கிண்டலடித்திருந்தார். இந்நிலையில் சீமான் விமர்சனத்திற்கு நேரடியாக பதிலடி கொடுத்த தவெக பெண் தொண்டர், “நாங்க அணில் குஞ்சுகள் கிடையாது, அக்னி குஞ்சுகள்” என்று கூறியுள்ளார்.