கலை நிகழ்ச்சியுடன் தவெக மதுரை மாநாடு தொடங்கியது. விஜய் நிகழ்ச்சி மேடைக்கு வந்துள்ளார். தவெகவின் கொள்கை தலைவர்களான அஞ்சலை அம்மாள், அம்பேத்கர், பெரியார், வேலு நாச்சியார், காமராஜர் ஆகியோரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து மொழிப்போர் தியாகிகளுக்கு மாநாட்டில் மரியாதையும் செலுத்தப்பட்டது. பிறகு மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூகநீதியின் பெயரில் உறுதிமொழியேற்பும் நடைபெற்றது.
இதனையடுத்து தலைவர் விஜய் தொடங்கியது கட்சி அல்ல புரட்சியை தொடங்கினார். கோடிக்கணக்கான மக்கள் படை இவர் பக்கம் உள்ளனர். இதற்கு பெயர் தான் சத்தம் இல்லாமல் சாதனை செய்வது என்று பொதுச்செயலாளர் ஆனந்த் தொடக்க உரையை தொடங்கியுள்ளார். இதற்கிடையில் விஜய் RAMP வாக் வந்தபோது தொண்டர்கள் கட்சி கொடியை தூக்கி எறிந்த போது விஜய் அதை எடுத்து தலையில் காட்டியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
That background song & his royal walk 🔥🔥🔥🔥🔥🌪️🌪️🌪️
ICONIC. #TVKVettriMaanadu pic.twitter.com/2ewwgLxUz5
— Sankalp Ayan™ (@CjvFanatic) August 21, 2025
