#BREAKING: கலை நிகழ்ச்சியுடன் தவெக மதுரை மாநாடு தொடங்கியது..!!

By Soundarya on ஆவணி 21, 2025

Spread the love

கலை நிகழ்ச்சியுடன் தவெக மதுரை மாநாடு தொடங்கியது. நேற்று முதலே மதுரையை நோக்கி தொண்டர்கள் பலரும் படையெடுத்து வருகிறார்கள். இளைஞர்கள் கூட்டத்தால் மதுரையே அலறிக் கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் TVK தொண்டர்கள்தான் காணப்படுகின்றனர். தொண்டர்களுக்கான உணவு மற்றும் பாதுகாப்பு பணிகள் என அனைத்துமே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விஜய் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே மதுரைக்கு வந்து விட்ட நிலையில் நேற்று இரவு மாநாட்டு திடலுக்கு வந்து பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.