விஜய் எடுத்த திடீர் முடிவு… ஜனவரியில் வெளியாக போகும் முக்கிய அறிவிப்பு… ஒட்டுமொத்தமாக அதிர போகும் தமிழகம்…!

By Nanthini on மார்கழி 13, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் ஒவ்வொரு நொடியும் தேர்தல் களம் பரபரப்பாகவே உள்ளது. குறிப்பாக தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜயின் ஒவ்வொரு நகர்வும் அரசியலில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. கரூரில் நடந்த துயர சம்பவத்திற்கு பிறகு கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கழித்து விஜய் சமீபத்தில் புதுச்சேரியில் பொதுக் கூட்டத்தை நடத்தி முடித்தார். இதனைத் தொடர்ந்து ஈரோட்டில் வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி பிரம்மாண்டமாக பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் வேளையிலும் விஜய் தீவிரம் காட்டி வருகின்றார்.

குறிப்பாக அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையன் விஜயுடன் இணைந்த பிறகு ஒவ்வொரு நொடியும் பரபரப்பாகவே உள்ளது. இப்படியான நிலையில் தைப்பொங்கலுக்கு வேட்பாளர் தேர்வு நேர்காணலை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே 234 தொகுதிகளுக்கும் முத்தேச பட்டியலை தயார் செய்து தொகுதிக்கு 4 பேர் வீதம் தேர்வு செய்து வைத்துள்ளாராம். அதில் 60 சதவீதம் மாவட்ட செயலாளர்களுக்கு பெண்களுக்கும் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 40% தொகுதிகள் பிரபலங்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுக்கு ஒதுக்க உள்ளதாக தமிழக வெற்றிக்கழகம் தரப்பில் கூறப்படுகிறது.