RBI திருத்த விதிகளின்படி இனி அனைத்து வங்கிகளும் ஒரே மாதிரியான குறைந்தபட்ச இருப்பு தொகையை கடைபிடிக்க வேண்டும் என்ற உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி சேமிப்பு கணக்குகளுக்கு நகர்ப்புறங்களில் 3000 ரூபாயும், சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் 1700 ரூபாய் என மினிமம் பேலன்ஸ் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த மினிமம் பேலன்ஸ் பராமரிக்க தவறினால் 100 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். இந்த நடைமுறை டிசம்பர் 10 முதல் அமலுக்கு வந்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அனைத்து வங்கிகளுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த செய்தி வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
