அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுவிற்கு பிறகு மாற்றுக் கட்சியினர் மற்றும் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்கும் பணியை இபிஎஸ் தீவிர படுத்தியுள்ளார். இபிஎஸ் தான் முதல்வர் வேட்பாளர் என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் தற்போது தேர்தல் பணிகளை அதிமுக தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணி மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது.
அதன்படி அமமுகவின் ஐடி விங் மாநிலத் துணைச் செயலாளர் இளையராஜா, திருச்சி வடக்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் டோல்கேட் ரெமோ, திருச்சி மாவட்ட கழக அவைத்தலைவர் ராமு, மாவட்ட மீனவர் அணி செயலாளர் கண்ணதாசன் உள்ளிட்ட பலரும் கூண்டோடு அதிமுகவில் இணைந்துள்ளனர்.
