தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் திமுக மீண்டும் தங்கள் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற நிலைப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இருந்தாலும் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அதிக தொகுதிகளை கேட்டு வருவது ஸ்டாலினுக்கு மிகப்பெரிய சிக்கலை உண்டாக்கியுள்ளது. குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் ஆகியவை கூடுதல் தொகுதிகளை கேட்டு வருவதாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்தது காங்கிரசும் இதனால் ஆளும் தரப்பும் ஆசுவாசமானது. ஆனால், திமுகவுக்கு தெரியாமல் தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் கூட்டணி அமைப்பது பற்றி சீக்ரெட் ஆக காங்கிரஸ் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காக அறிவிக்கப்படாத அணி ஒன்று தீவிரமாக இயங்கி வருகிறதாம். கேட்கும் சீட்டை கொடுக்கவில்லை என்றால் மீண்டும் கூட்டணியில் குழப்பம் வெடிக்கலாம் என்று பேசப்படுகிறது.
