முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது. ஓபிஎஸ் மற்றும் ஈ பி எஸ் பிரிந்துள்ள நிலையில் கட்சி ஒருங்கிணைப்பு குறித்து பேசியதுடன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை சந்தித்ததால் அதிமுகவிலிருந்து செங்கோட்டையனை எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் நீக்கினார். இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் கோபிசெட்டிபாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்தார்.
இந்நிலையில் செங்கோட்டையின் வீட்டுக்கு தமிழக காவல்துறை சார்பாக வழங்கப்பட்டிருந்த துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விஜய் சார்பில்வட இந்தியாவை சேர்ந்த இரண்டு பவுன்சர்கள் அவரின் வீட்டுக்கு பாதுகாப்பு பணிக்காக பணியமர்த்த பட்டுள்ளதாக தெரிகிறது.
