திமுக கூட்டணியில் விரிசல்…. தொகுதி பங்கீடு… முக்கிய முடிவை எடுத்த காங்கிரஸ்… செம ஷாக்கில் ஸ்டாலின்…!

By Nanthini on மார்கழி 3, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் திமுக மீண்டும் தங்கள் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற நிலைப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இருந்தாலும் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அதிக தொகுதிகளை கேட்டு வருவது ஸ்டாலினுக்கு மிகப்பெரிய சிக்கலை உண்டாக்கியுள்ளது. குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் ஆகியவை கூடுதல் தொகுதிகளை கேட்டு வருவதாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் காங்கிரஸ் குழு தொகுதி பங்கீடு குறித்து இன்று திமுகவுடன் பேச்சுவார்த்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் 40 தொகுதிகளை காங்கிரஸ் கேட்க உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் இந்த முறை அதிக தொகுதிகளில் திமுக போட்டியிடும் திட்டத்தில் இருப்பதால் காங்கிரஸ் கேட்கும் தொகுதிகள் கிடைக்குமா என்பது சந்தேகம்தான் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.