தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) தலைமையிலான புதிய ஆட்சியில், அமைச்சரவை விரிவாக்கத்திற்கான ஒப்புதலை ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த புதிய பட்டியலில் த.வெ.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 23 சட்டமன்ற உறுப்பினர்களின் (எம்.எல்.ஏ) பெயர்கள் இடம்பெற்றுள்ளன. புதிய அரசின் நிர்வாகத்தை வலுப்படுத்தும் வகையிலும், அனைத்துப் பகுதிகளுக்கும் சமமான பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையிலும் இந்த அமைச்சரவை விரிவாக்கம் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த விரிவாக்கப் பட்டியலில் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர்களான ஸ்ரீநாத் (தூத்துக்குடி), கமலி (அவிநாசி), விஜயலட்சுமி (குமாரபாளையம்), ரஞ்சித்குமார் (காஞ்சிபுரம்), வினோத் (கும்பகோணம்), ராஜீவ் (திருவாடனை), ராஜ்குமார் (கடலூர்), காந்திராஜ் (அரக்கோணம்), மதன்ராஜா (ஓட்டப்பிடாரம்), ஜெகதீஷ்வரி (ராஜபாளையம்), மற்றும் விஜய் பாலாஜி (ஈரோடு கிழக்கு) ஆகியோர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்க உள்ளனர். இவர்கள் தவிர லோகேஷ் தமிழ்ச்செல்வன் (ராசிபுரம்), விஜய் தமிழன் பார்த்திபன் (சேலம் தெற்கு), ரமேஷ் (ஸ்ரீரங்கம்), குமார் (வேளச்சேரி) ஆகியோரின் பெயர்களும் இதில் அடங்கும்.
மேலும், சென்னை மற்றும் கொங்கு மண்டலப் பகுதிகளைச் சேர்ந்த தென்னரசு (ஸ்ரீபெரும்புதூர்), சம்பத்குமார் (கோவை வடக்கு), முகமது ஃபர்வாஸ் (அறந்தாங்கி), சரத்குமார் (தாம்பரம்), மரிய வில்சன் (ஆர்.கே.நகர்), விக்னேஷ் (கிணத்துக்கடவு) மற்றும் மேலூர் தொகுதி எம்.எல்.ஏ விஸ்வநாதன் ஆகியோருக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுடன் த.வெ.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜேஷ்குமார் இந்த புதிய அமைச்சரவை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
