தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இடையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. தங்கள் கூட்டணியை பலமாக வைத்துக் கொண்டு மீண்டும் திமுக ஆட்சியை தமிழகத்தில் அமைத்து விடலாம் என முதல்வர் ஸ்டாலின் ஒரு பக்கம் காய் நகர்த்தி கொண்டிருக்க மறுப்பாக்கம் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் கூட்டணி அமைத்து அதிமுக ஆட்சியை தமிழகத்தில் நிலைநிறுத்த வேண்டும் என போராடிக் கொண்டிருக்கிறார். இவர்களுக்கு நடுவே தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி அரசியலில் பயணித்துக் கொண்டிருக்கும் விஜய் தமிழக மக்களுக்கு புதிய ஆட்சியை வழங்க வேண்டும் என்று உறுதியாக உள்ள நிலையில் இதுவரை எந்த கட்சியுடனும் விஜய் கூட்டணி அமைக்கவில்லை.
இப்படியான நிலையில் தமிழக வெற்றி கழகம் கூட்டணியில் பாமக இணைக்க வியூகம் வகுத்து ஜான் ஆரோக்கியசாமி காய் நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்தக் கூட்டணி வெற்றி பெற்றால் அன்புமணிக்கு துணை முதல்வர் பதவி வழங்கவும் தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 2016 தேர்தலில் மாற்றம் முன்னேற்றம் அன்புமணி வியூகத்தை வகுத்து தீவிரமாக களப்பணி செய்த ஜான் ஆரோக்கியசாமி, நேரடியாக அன்புமணி தரப்பிடம் பேசி உள்ளதாகவும் தெரிகிறது. தற்போது இந்தச் செய்தி தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
