“சார் எனக்கு ரொம்ப வயிறு வலிக்குது”.. துடிதுடித்த மாணவனை ஆசிரியர் செய்த கொடூரம்.. கடலூரில் பரபரப்பு…!

By Nanthini on ஆடி 28, 2025

Spread the love

கடலூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் ஒரு அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே அரசு ஆண்கள் பள்ளி ஒன்று உள்ளது. அந்தப் பள்ளியில் படித்து வரும் மாணவரை ஆசிரியர் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு ஆண்கள் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவர் ஒருவர் ஓய்வு அறையில் இருந்த ஆசிரியர் சுபாஷிடம் சென்று தனக்கு வயிறு வலிப்பதாக கூறியுள்ளார்.

அந்த சமயத்தில் செல்போன் பேசிக் கொண்டிருந்த அந்த ஆசிரியர், மாணவன் மீண்டும் மீண்டும் வயிறு வலிப்பதாக கூறியதால் ஆத்திரமடைந்து மாணவரை வாட்டர் பாட்டிலால் தலையில் அடித்துள்ளார். பலமாக மாணவனின் தலையில் அடித்ததால் மாணவருக்கு தலையில் ரத்தம் வந்துள்ளது. உடனே மாணவனை அங்கிருந்த சக ஆசிரியர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆசிரியரை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.