கன்னட திரை உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகர் ரம்யா .இவர் தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். மண்டியா தொகுதியில் காங்கிரஸ் எம்பி ஆகவும் இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக படங்களில் நடிக்காமலும், அரசியலில் இருந்தும் சற்று ஒதுங்கே இருந்தார். இதற்கிடையில் ஆப்பிள் பாக்ஸ் ஸ்டூடியோ திரைப்பட நிறுவனத்தின் மூலமாக தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்திருக்கிறார்.
இந்நிலையில் நடிகை ரம்யா தனக்கு நடிகர் தர்ஷனின் ரசிகர்கள் ஆபாசமாக மெசெஜ் செய்வதாக 11 பேரின் லிஸ்ட்டை வெளியிட்டுள்ளார். ரசிகர் ரேணுகாசாமி என்பவரை கொலை செய்த வழக்கில் ஜாமினில் தர்ஷன் வெளிவந்தது தொடர்பாக ரம்யா கடுமையாக விமர்சனம் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து, தர்ஷனின் வெறித்தனமான ரசிகர்கள், தனக்கு ஆபாசமாக மெசெஜ் அனுப்புவதாக நடிகை ரம்யா குறிப்பிட்டுள்ளார்.
