தமிழக அரசியலில் திமுக மற்றும் தமிழக வெற்றிக் கட்சி இடையே ‘பார்ட்டி ஃபண்ட்’ தொடர்பான விவாதம் தீவிரமடைந்துள்ள சூழலில், தவெகவின் ஊழல்கள் குறித்து உதயநிதி ஸ்டாலின் விரைவில் வலுவான ஆதாரங்களுடன் கூடிய கோப்புகளை வெளியிடவுள்ளதாக திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், எவ்வித அடிப்படை ஆதாரமும் இன்றி ‘பார்ட்டி ஃபண்ட்’ என்ற பெயரில் முதல்வர் விஜய் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என்றும், உண்மையில் தவெக தரப்பிலேயே மானியக் கோரிக்கையின் கீழ் அரசு நிதியை விடுவிப்பதற்கு முன்பாகவே டெண்டர்களை ஒதுக்கி ‘பார்ட்டி ஃபண்ட்’ வசூலிப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளதாகவும் சாடினார்.
‘பார்ட்டி ஃபண்ட்’ மேலும், தவெக எந்தெந்த இடங்களிலெல்லாம் இதுபோன்று நிதியைக் கோருகிறதோ, அது தொடர்பான அனைத்து விவரங்களையும் விரிவாகச் சேகரித்து, பொதுமக்களின் பார்வைக்குச் சான்றுகளுடன் திமுக வெளியிடும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
