தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் வரும் 16-ம் தேதி சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. கட்சியின் 22-வது தொடக்க விழா கொண்டாட்டங்கள் மற்றும் வரவிருக்கும் இடைத்தேர்தல் குறித்து இதில் ஆலோசிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், திமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையிலும், தேமுதிக இதுவரை தனது ஆதரவை வெளிப்படையாகக் தெரிவிக்காமல் அமைதி காப்பதும், தனியாக ஆலோசனை நடத்துவதும் அரசியல் களத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. தொகுதியில் தங்களின் செல்வாக்கை உறுதிப்படுத்திக் கொள்ளவா அல்லது புதிய அரசியல் நகர்வாக கூட்டணியில் ஏதேனும் மாற்றங்களை ஏற்படுத்தி வரவிருக்கும் இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடவோ அல்லது வேறு நிலைப்பாடு எடுக்கவோ வாய்ப்புள்ளதா என்ற எதிர்பார்ப்பு இக்கூட்டத்தின் முடிவில் தெரியவரும்.
