பதவியை தூக்கி எறிந்த எம்.எல்.ஏ-க்கள்… இபிஎஸ் போட்ட மாஸ்டர் பிளான்… ஷாக்கில் விஜய்…. அரசியலில் அடுத்த டுவிஸ்ட்….!

By Nanthini on புரட்டாதி 10, 2026

Spread the love

தமிழக அரசியல் களத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்குமான இடைத்தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதிமுக சார்பில் இத்தொகுதிகளில் வெற்றிபெற்ற பெண் சட்டமன்ற உறுப்பினர்கள், தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததால் இத்தேர்தல் தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது. இந்தச் சூழலில், தங்கள் கட்சியின் பலத்தை மீண்டும் நிரூபிக்கவும், மாற்று முகாமிற்குச் சென்றவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி வியூகத்தை வகுத்து வருகிறார்.

அதன் ஒருபகுதியாக, அதே தொகுதிகளில் மீண்டும் பெண் வேட்பாளர்களையே களமிறக்க EPS திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, மதுராந்தகம் தொகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான கனிதா சம்பத்தையும், தாராபுரம் தொகுதியில் உமா சங்கரியையும் போட்டியிட வைக்க அதிமுக தலைமை பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இத்தேர்தல் நகர்வு, இழந்துபோன தொகுதிகளை மீட்கும் முயற்சியாக மட்டுமன்றி, ஆளுங்கட்சிக்கும் விலகிச் சென்றவர்களுக்கும் ஒரே நேரத்தில் பதிலடி கொடுக்கும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.