திருப்பத்தூரில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி வி தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, இந்த ஆண்டு இறுதிக்குள் கூட்டணி குறித்து தெரிவிப்போம். எங்கள் கூட்டணி தான் வெற்றி பெறும். விஜய் தலைமையில் ஒரு கூட்டணி அமையும் என்று தான் கூறினேன். விஜய் கூட்டணிக்கு செல்வோம் என்று நான் கூறவில்லை. அரசியலில் அனுபவத்தை விட மக்கள் யாரை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.
ஏற்கனவே அதிமுக கூட்டணிக்கு வரப்போகிறது என சொன்னதற்கு மதுரை மாநாட்டில் விஜய் பதிலடி கொடுத்தார். மீண்டும் இவர்களின் அழைப்புகளுக்கு விஜய் பதில் கூறுவார். ஜெயலலிதா, எம்ஜிஆர் கட்டி காத்த அதிமுக இன்று இல்லை. பழனிச்சாமி ஆட்சிக்கு வர முடியாது என்று தெரிந்தும் எங்களோடு கூட்டணிக்கு வாருங்கள் என்று மற்றவர்களை அழைக்கிறார்.
தமிழக மக்கள் அதை நகைப்பாக தான் பார்க்கின்றனர். காலில் விழுந்து பதவி வாங்கிவிட்டு காலை வாரியவர் பழனிச்சாமி. பழனிச்சாமி துரோகத்துக்கு அவர் வீழ்த்தப்படுவார். பழனிச்சாமியை முதல்வராக்கவா விஜய் பல கோடி ரூபாய் வருமானத்தை விட்டு வந்தார்? அவர் தம் தலைமையில் தான் கூட்டணி அமைப்பார். பழனிச்சாமி தலைமையை விஜய் ஏற்றுக் கொள்வது தற்கொலைக்கு சமம் என விமர்சித்துள்ளார்.
