“அட இது நல்லா இருக்கே”.. ஜப்பானில் உணவு பேக்கேஜிங் முறையில் இப்படி ஒரு விதிமுறையா?… உலக நாடுகளை வியக்க வைக்கும் ஜப்பான் பெண்ணின் வீடியோ…!

By Nanthini on ஐப்பசி 25, 2025

Spread the love

உலக நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் உணவுப் பொருட்களில் பல பேக்கேஜிங் முறைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இன்றைய காலத்தில் உணவுப் பொருட்களை வாங்குபவர்கள் உண்மையையும் பாராட்டத்தக்க நம்பகத் தன்மையையும் விரும்புகிறார்கள். அதன்படி பேக்கேஜிங் முறையில் ஜப்பான் ஒரு சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறது. ஜப்பானில் ஒரு சுவாரஸ்யமான விதிமுறை பின்பற்றப்படுகிறது. அதாவது அங்கு விற்பனை செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் பாக்கெட்டில் உள்ள உண்மையான படம் இருக்க வேண்டும். அதாவது பாக்கெட்டில் உள்ள பொருள் எப்படி இருக்கின்றதோ அதே தரமும் வடிவமும் கொண்ட புகைப்படம் மட்டுமே பாக்கெட்டின் வெளியே அச்சிடப்பட வேண்டும்.

இல்லையென்றால் அது சட்ட விரோதமாக கருதப்படுகின்றது. இந்த விதிமுறையால் வாங்குபவர்கள் ஏமாறாமல் இருக்கின்றனர். இந்த கடுமையான நெறிமுறையின் காரணமாக அந்த நாட்டின் பொருட்கள் மீது மக்களின் நம்பிக்கை அளவுக்கு அதிகமாகவே உள்ளது. தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு பெண் இந்த விதிமுறையை விளக்கி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அது உலகம் முழுவதும் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜப்பானின் இந்த சட்டம் நெறிமுறைக்கு மட்டுமல்ல நம்பிக்கைக்கான அடையாளமாகவும் பார்க்கப்படுகின்றது.

   

 

   

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Aakanksha Monga பதிவைப் பகிர்ந்துள்ளார் (@aakanksha.monga)