உச்சக்கட்ட அதிர்ச்சி… 3 வயது குழந்தையின் முகத்தில் கரியை பூசி, சாக்கடை நீரை குடிக்க வைத்து… குழியைத் தோண்டி வீசிய கொடூர சம்பவம்…!

By Nanthini on ஐப்பசி 25, 2025

Spread the love

இப்போதெல்லாம் சட்டத்தை மீறிய வன்முறைகள் பல இடங்களில் நடந்து கொண்டிருக்கின்றன. அப்படி ஒரு சம்பவம் தான் உத்திரபிரதேசம் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுவனை அப்பகுதியில் உள்ள சில சிறுவர்கள் தூக்கிச் சென்று மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபட்டுள்ளனர். முதலில் குழந்தையின் முகத்தில் கருப்பு பூசப்பட்டதோடு தரையில் ஆழமாக குழி தோண்டி அதில் குழந்தையை வீசியதாக தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

குழந்தை எப்படியோ  மீண்டு வந்தாலும் குற்றவாளிகள் மகனை மின்கம்பத்தில் தொங்கவிட முயன்றதாகவும் கூட்டம் நெருங்கியதை கண்ட அவர்கள் தப்பி சென்றதாகவும் தெரிகிறது. அதற்கு முன்னதாகவே சிறுவனை அழுக்கு வடிகால் தண்ணீர் குடிக்க கட்டாயப்படுத்தி கொடூர செயலில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தற்போது குழந்தையின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ள நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பகுதியில் பெயரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.