தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் தற்போது அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பரப்புரை மற்றும் கூட்டணி என தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார்கள். இப்படியான நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், NDA கூட்டணியில் இருந்து இபிஎஸ்ஸுக்கு எதிராகவே வெளியேறினோம் . கூட்டணி மற்றும் அதிமுக விவகாரத்தை அமித்ஷா சரி செய்வார் என காத்திருந்த வேலையில் அண்ணாமலை தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டது அதிர்ச்சி அளித்தது.
ஓபிஎஸ்-க்கு நடந்தது தனக்கும் நடக்கும் என உத்தேசித்து கூட்டணியில் இருந்து வெளியேற முடிவை எடுத்தேன். கூட்டணியில் இருந்து விலகியது நான்கு மாதங்களாக நிதானமாக யோசித்து எடுத்த முடிவுதான். 2026 தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என பேசியதால் அவருடன் கூட்டணி என சிலர் பேசுவது தவறானது. தேர்தல் கூட்டணி விவகாரத்தை நயினார் நாகேந்திரன் சரியாக கையாளவில்லை என சாடிய டிடிவி தினகரன், டிசம்பரில் கூட்டணி முடிவு அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
