தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே சமீபத்தில் NDA கூட்டணியில் இருந்து விலகுவதாக டிடிவி தினகரன் அறிவித்திருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பி இருந்த நிலையில் இபிஎஸ்-ஐ சிஎம் வேட்பாளராக ஏற்க முடியாது என தொடர்ந்து தினகரன் கூறி வருகிறார்.
அதோடு அமமுக வெற்றி கூட்டணியில் இணையும் எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் விஜய் உடன் டிடிவி தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கூட்டணி குறித்து டிசம்பர் மாதத்தில் அறிவிப்பேன் என டிடிவி தினகரன் கூறிய நிலையில் பாஜகவுக்கு அழுத்தம் கொடுக்கவே விஜய் தரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
