தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் இபிஎஸ் மீது அதிருப்தியில் இருக்கும் கட்சி நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்து விலகி வருகின்றன. அதேசமயம் சமீபத்தில் செங்கோட்டையன் அதிமுகவை மீண்டும் ஒன்று இணைக்க வேண்டும் என்று கூறி இபிஎஸ்-க்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்த நிலையில் அவரை கட்சியிலிருந்து ஒட்டுமொத்தமாக நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து செங்கோட்டையன் நடுத்தகட்ட நகர்வு என்ன என்பது உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் அவர் டெல்லியில் அமித்சாவை சந்தித்து பேசி இருந்தார். இந்நிலையில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் AK செல்வராஜ் தலைமையில் கோபி அலுவலகத்தில் அவசர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. செங்கோட்டையனுக்கு மாற்றாக நியமிக்கப்பட்ட இவரை கடந்த வாரம் செங்கோட்டையனின் ஆதரவாளராக இருந்த எம்எல்ஏ பண்ணாரி உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு அளித்திருந்தனர். கட்சியிலிருந்து செங்கோட்டையை நீக்கப்படலாம் என பேசப்பட்டு வரும் நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் கவனத்தை பெற்றுள்ளது.
