சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயல் இழப்பு நிபுணர்கள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். விஜயின் வீட்டு மொட்டை மாடியில் இன்று அதிகாலை இளைஞர் ஒருவர் பதுங்கி இருந்த நிலையில் விஜய் வீட்டில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிகாலையிலையே பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது Y பிரிவு பாதுகாவலர்களின் பரிந்துரையின் அடிப்படையில் தற்போது சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
