“மரியாதை ரொம்ப முக்கியம் பாஸ்”  எங்களை மதித்தால் மட்டுமே போர் முடியும்… ஈரானுக்கு செக் வைத்த டிரம்ப்..!!

By Soundarya on ஆனி 24, 2026

Spread the love

அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஈரான் அமெரிக்காவை மதிக்கும் வரை இரு நாடுகளுக்கும் இடையே எந்தப் பிரச்சினையும் இருக்காது என்று தெரிவித்துள்ளார். அந்தப் பரஸ்பர ‘மரியாதை’ மட்டுமே இரு நாடுகளுக்கும் இடையிலான போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அச்சுறுத்தல்களை விடுத்து, தூதரக ரீதியிலான மரியாதையை வழங்குவதே அமைதியை நிலைநாட்டுவதற்கான மிக முக்கிய வழியாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே முழுமையான அமைதி ஒப்பந்தம் ஒன்று ஏற்பட்டால், உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீரிணை கடல் வழிப்பாதை முற்றிலும் திறக்கப்படும் என டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த கடல் வழிப்பாதை சீராக இயங்குவதன் மூலம், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை கணிசமாக நிலைநிறுத்தப்படும் என்றும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.