3 வருஷம் ஆச்சு.. இன்னும் செந்தில் பாலாஜி சகோதரரை காவல்துறை கைது செய்யாதது ஏன்..? நீதிமன்றம் அதிரடி..!!

By Soundarya on ஆனி 24, 2026

Spread the love

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார், கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகளின் காரைத் தாக்கியதாகப் பதிவான வழக்கில் முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, கடந்த 3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் தம்பியை ஏன் இதுவரை காவல்துறை கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இத்தனை வருடங்களாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், தற்போது திடீரென காவல்துறை தீவிரம் காட்டுவது ஏன் என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை சோதனைகளின் போது ஏற்பட்ட இந்த மோதல் தொடர்பாகக் கடந்த ஜூன் 2026-ல் கரூர் மாவட்ட தனிப்படை போலீசார் சென்னையின் பல்வேறு இடங்களில் அசோக் குமாரைத் தேடி விசாரணை நடத்தினர். வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த வழக்கு மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குகளிலும் இவரது பெயர் தொடர்புடையதாகக் கூறப்படும் நிலையில், இந்த குறிப்பிட்ட தாக்குதல் வழக்கில் தமக்கு முன்ஜாமின் வழங்கக் கோரி அவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.