“என் புருஷன விட்டுரு” வெளிநாட்டில் மகன்.. மருமகளோடு உல்லாசமாக இருந்த மாமனார்… ஆத்திரத்தில் கண்டித்த மாமியாருக்கு நேர்ந்த கொடூரம்… கொலை நடுங்க வைக்கும் சம்பவம்..!!

By Soundarya on ஆனி 24, 2026

Spread the love

ஜார்க்கண்ட் மாநிலம் கிரிடி மாவட்டத்தில், மாமனாருடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த மாமியாரை மருமகள் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரீத்தி குமாரி (24) என்ற பெண்ணின் கணவர் ஹைதராபாத்தில் பணியாற்றி வரும் நிலையில், வீட்டில் தனியாக இருந்த பிரீத்திக்கும் அவரது 60 வயது மாமனார் தௌலத் சாவ் என்பவருக்கும் இடையே தவறான பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த கள்ளத்தொடர்பை பிரீத்தியின் மாமியார் குல்சி தேவி (55) கண்டித்ததால், அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்தத் தகராறின் உச்சக்கட்டமாக, பிரீத்தி குமாரியும் அவரது மாமனாரும் இணைந்து குல்சி தேவியைத் திட்டமிட்டு கொலை செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய பிரீத்தி குமாரி மற்றும் அவரது மாமனார் தௌலத் சாவ் ஆகிய இருவரையும் ஜார்க்கண்ட் மாநிலப் போலீசார் கைது செய்து சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள பிரீத்தி குமாரி, சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பதால் அவரது வீடியோக்கள் தற்போது இணையத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன.