elon

சொன்னதை செய்தார் டிரம்ப்… தன்னை ஆதரித்த எலன் மஸ்க்க்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு…

By admin on கார்த்திகை 13, 2024

Spread the love

சமீபத்தில் அமெரிக்க தேர்தல் நடந்து முடிந்தது. இதில் மாபெரும் வெற்றி பெற்ற ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்று இருக்கிறார். அமெரிக்க அதிபராக மறுபடியும் ஜெயிப்பாரா என்ற நிலையில் தான் இருந்தது.

   

ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ட்ரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. நூலிலையில் அவர் உயிர் தப்பினார். அதற்கு பிறகு அவருக்கு ஆதரவு பெரு ஆரம்பித்தது. அதுபோல் அமெரிக்க தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று அதிபராக ஆகியிருக்கிறார் டொனால்ட் டிரம்ப்.

   

டொனால்ட் ட்ரம்புக்கு ஆதரவாக இருப்பவர் ட்விட்டரின் உரிமையாளரும் உலகில் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலன் மஸ்க். டிரம்ப்பின் தேர்தல் செலவிற்காக தேர்தல் நிதிக்காக என் மஸ்க் கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய்க்கு மேல் கொடுத்திருக்கிறார் என்ற செய்திகள் கூட சமீபத்தில் வெளியாகின.

 

எலன் மஸ்க் தன்னை ஆதரித்த காரணத்தால் தேர்தலில் வென்ற ட்ரம்ப் எலான் மஸ்க்கு தனது அரசவையில் பதவி ஒன்றை கொடுத்திருக்கிறார். இதுதான் எலன் மஸ்க்க்கு என்னுடைய மிகப்பெரிய பரிசு என்று கூறி இருக்கிறார். இதை யாருமே எதிர்பார்க்கவில்லை. தற்போது உலகத்தின் கவனம் முழுவதும் அமெரிக்காவின் மீதுதான் இருக்கிறது.