பொதுவாகவே சினிமா மற்றும் சின்னத்திரையில் நடித்து சம்பாதிக்கும் நடிகர் நடிகைகள் அதனை தொழிலில் முதலீடு செய்து நன்கு லாபம் பார்த்து வருகிறார்கள். அதன்படி திருமண மண்டபம் கட்டி அதன் மூலம் சம்பாதிக்கக்கூடிய நடிகர் நடிகைகள் வெகு சிலர் மட்டுமே. நடிகர் விஜய்க்கு சொந்தமாக சென்னையில் பல இடங்களில் திருமண மண்டபங்கள் உள்ளது. அதற்கு லட்சக்கணக்கில் வாடகை வாங்கி தளபதி சம்பாதித்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது எதிர்நீச்சல் சீரியல் நடிகையும் திருமண மண்டபம் ஒன்றை சொந்தமாக கட்டியுள்ளார்.

சன் டிவியில் சக்கை போடு போட்ட சீரியல்களில் எதிர்நீச்சல் சீரியலும் ஒன்று. திருச்செல்வம் இயக்கியிருந்த இந்த சீரியல் கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் முடிவுக்கு வந்தது. டிஆர்பியில் தொடர்ந்து நம்பர் ஒன் இடத்தை பிடித்த சீரியல். அதற்கு முக்கிய காரணம் இந்த சீரியலின் விறுவிறுப்பான கதைக்களமும் அதில் நடித்த நடிகர்களும் தான்.

இந்த சீரியலில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது ஆதிரை மற்றும் கரிகாலன் திருமணம் தான். அப்படி எதிர் நீச்சலில் பரபரப்பாக பேசப்பட்ட ஆதிரை கேரக்டரில் நடித்தவர்தான் சத்யா தேவராஜன். இவர்தான் தற்போது சொந்தமாக புதிய பிசினஸ் தொடங்கியுள்ளார். எதிர்நீச்சல் தொடர் முடிவடைந்ததை தொடர்ந்து ஒரு பிரம்மாண்ட கல்யாண மண்டபத்தை கட்டி அதற்கு கிரகப்பிரவேசம் சத்யா நடத்தியுள்ளார்.

அப்போது எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சத்யா, எனது குடும்பத்தின் உதவியாள் என் காதல் கணவருடன் சேர்ந்து எங்கள் கனவை நினைவாக்கியுள்ளோம், வெங்கடாசலபதி பேலஸ் என்ற பெயரிட்டுள்ள இந்த திருமண மண்டபத்துக்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
