அங்க எலியா இருக்கிறதை விட, இங்க ராஜாவாவே இருந்துக்கிறேன்.. ஹிந்தி சினிமாவை மொத்தமாக கமல் ஓரம் கட்ட இதுதான் காரணமா..?

By Nanthini on கார்த்திகை 14, 2024

Spread the love

இந்திய சினிமாவில் இதுவரை நடித்த நடிகர்களில் ஒரு சிறந்த நடிகராக இருப்பவர்தான் உலகநாயகன் கமல்ஹாசன். இவர் நடிகராக மட்டுமல்லாமல் பாடகர் ஆகவும், பாடலாசிரியராகவும், மேக்கப் கலைஞனாக பன்முகத் திறமைகள் கொண்ட நடிகராக இருந்துள்ளார். இவர் முதன் முதலில் 1960 ஆம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். ஆறு வயதில் தொடங்கி தற்போது வரை 220க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கமல் நடித்துள்ளார். இந்திய சினிமாவின் உயரிய விருதுகள் ஆன பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் ஆகிய விருதுகளை கமல் வென்றுள்ளார்.

கமல்ஹாசன் சாதனை குறிப்புகள் - Vanakkam London

   

தமிழக அரசின் விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். தென்னிந்திய திரைப்படங்களை தவிர வங்க மொழிகளிலும் நடித்துள்ளார். தமிழை தவிர்த்து தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என பழமொழிகளிலும் கமல்ஹாசன் நடித்திருக்கிறார். அவர் இறுதியாக இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைப் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது கமல் அமெரிக்காவில் தங்கிய சினிமா சம்பந்தப்பட்ட படிப்புகளை படித்து வருகின்றார். தமிழில் கொடி கட்டி பறந்த கமல்ஹாசன் ஏன் இந்தியில் வரவில்லை என்பதுதான் அனைவருடைய கேள்வியாக உள்ளது.

   

நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி! - லங்காசிறி நியூஸ்

 

ஹிந்தியில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் தான் ஏக் துஜே ஹேலியே திரைப்படம். கமல் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் நல்ல வசூலை பெற்றது. அதனைத் தொடர்ந்து சாகர் என்ற திரைப்படத்திலும் கமல் நடித்தார். அப்படி இருந்தும் அவரால் இந்தியில் சாதிக்க முடியவில்லை. அதற்கு காரணம் ஆடியன்ஸ்கள் குறைவாக இருந்தது தான் என்று கவிதாலயா கிருஷ்ணன் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதே சமயம் கமலை உள்ளம் என்று கூட அங்கு விமர்சனம் செய்துள்ளனர்.

krishna

அப்படி பார்த்தால் அமீர்கான் கூட குள்ளம் தான். அங்கு சில பாலிஷ்டிக்கும் நடந்துள்ளது. அதாவது இந்த குரூப் மட்டும் தான் இந்தியில் ஆக்கிரமிக்க முடியும் என்ற பாலிடிக்ஸ் இருந்ததாக கவிதாலயா கிருஷ்ணன் கூறியுள்ளார். இதனால்தான் கமல் ஹிந்தியில் தொடர்ந்து நடிக்கவில்லை என்றும் தமிழுக்கு ராஜாவாக இருக்கும் போதே ஹிந்தியில் ஏன் எளிதாக இருக்க வேண்டும் என்று நினைத்து கமல் அப்படியே ஹிந்தியில் இருந்து ஒதுக்கி விட்டதாகவும் தற்போது தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்பதாகவும் கவிதாலயா கிருஷ்ணன் கூறியுள்ளார். மேலும் ஒரு நல்ல நடிகரை ஹிந்தி சினிமா தவற விட்டு விட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.