லீவு கொடுக்க மறுத்த மேனேஜர்.. காத்திருந்து பழிவாங்கிய நாகேஷ்.. அப்படி என்ன செய்தார் தெரியுமா..?

By Nanthini on கார்த்திகை 14, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக கொடி கட்டி பறந்தவர் தான் நடிகர் நாகேஷ். அவருடைய அலட்டிக் கொள்ளாத முக பாவங்களும் ஆபாசம் இல்லாத காமெடி வரிகளும், உடல் அசைவுகளும் அவரை அடித்துக் கொள்ள ஆளே இல்லை, அவரைப்போல் யாராலும் வர முடியாது என்று இன்று வரை நிரூபித்துள்ளது. அவரது ஏறு இறங்கும் குரல் ஜாலம், மாறும் உடல் மொழி, ஒல்லியான உடம்பை வைத்துக்கொண்டு அருமையான நடனம் மற்றும் கவலையை மறக்க செய்யும் சிரிப்புக்கு கேரண்டி தரும் நகைச்சுவை பேச்சு என்று ஆல்ரவுண்டராக வலம் வந்தவர். புரட்சித்தலைவரின் பல திரைப்படங்களில் நகைச்சுவை ஜாம்பவான் நாகேஷ் நடித்து அசத்தியுள்ளார். தமிழ் சினிமாவில் இந்த அளவுக்கு புகழ் பெற மக்கள் திலகமும் ஒரு காரணம் என்றால் மிகையல்ல.

If comedy Nagesh | நகைச்சுவை என்றால் நாகேஷ்...!

   

 

   

 

 

அப்போது நாகேஷ் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த காலம்.  அந்த சமயத்தில் நடிகர் நாகேஷ் ஒரு நாடகத்திற்கு ஒரு நாள் ஒத்திகைக்கு லீவு தேவைப்பட்டுள்ளது. ஆனால் லீவு கேட்டா எப்படி நாளும் மேனேஜர் தர மாட்டார் என்று நன்றாகவே அறிந்த நாகேஷ் ஒரு கடிதம் எழுதியுள்ளார். ஆனால் அந்த கடிதத்தை படித்த மேனேஜர் லீவு எல்லாம் தர முடியாது ஒழுங்கா நாளைக்கு ஆபீஸ்க்கு வந்து சேரு என்று திட்டியுள்ளார். உடனே நாகேஷ், எப்படி நாளும் நமக்கு லீவு கிடைக்காது நம்மள திட்டுனா மேனேஜர் ஒரு வழி பண்ணு ஆகணும் என்று யோசித்து அடுத்த நாள் ஆபீசுக்கு டவுசர் பனியனோடு ஆபீசுக்கு சென்று அமர்ந்துள்ளார்.

நாகேஷ் நினைவலைகள்: மூன்று முறை உயிர்த்தெழுந்த உன்னத கலைஞன் - BBC News தமிழ்

அதைப் பார்த்து அங்கிருந்து அனைவரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் மேனேஜர் கோபத்துடன் வந்து, என்ன இப்படி வந்திருக்க என்று கேட்டுள்ளார். உடனே நாகேஷ், சாரி என்கிட்ட இருந்தது ரெண்டு டிரஸ். ஒன்னு நேத்து போட்டுட்டேன் இன்னொன்னு மழையில் நனைஞ்சிருச்சு. ஈரத் துணியை போட்டால் எனக்கு ஜலதோஷம் பிடிக்கும். இதை எப்படி வெளியில சொல்றதுன்னு தெரியாம தான் உங்ககிட்ட நான் லீவு கேட்டேன், ஆனா நீங்க லீவு கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டீங்க, அதனாலதான் என்கிட்ட இருந்து டிரஸ் போட்டுட்டு வந்து இருக்கேன் என்று நாகேஷ் கூறியதும் சுற்று இருந்த அனைவரும் சிரித்துள்ளனர். உடனே மேனேஜரும் வேற வழி இல்லாம போய் தொல என்று லீவு கொடுத்துள்ளார்.