பல வாரங்களாக TRP-யில் அடி வாங்கும் விஜய் டிவி.. டாப் லிஸ்டில் இருக்கும் சீரியல்கள் என்னென்ன தெரியுமா..?

By admin on ஐப்பசி 5, 2024

Spread the love

TRP ரேட்டிங்கில் முதல் ஐந்து இடங்களை பிடித்த சீரியல்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
கயல்
கயலுக்கும் எழிலுக்கும் கல்யாணம் எப்போது நடக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். திருமணத்தை நிறுத்துவதற்காக எதிரிகள் சதி செய்கின்றனர். டாக்டர் கயலை பழிவாங்குவதற்காக அவரை கடத்திவிட்டார். எழில் கயலை காப்பாற்ற போராடிய காட்சிகள் விறுவிறுப்பாக ஒலிபரப்பானது. TRP ரேட்டிங்கில் 10.03 புள்ளிகளுடன் கயல் சீரியல் முதலிடத்தில் இருக்கிறது.

டிஆர்பி-யில் சன் டிவி கயல் சீரியல் செய்த சாதனை! கேக் வெட்டி கொண்டாட்டம்

   

சிங்க பெண்ணே
மகேஷ்காக அன்பு தனது காதலை விட்டுக் கொடுக்க நினைக்கிறார். இதனால் ஆனந்தியை வெறுப்பது போல நடிக்கிறார். முதற்கட்டமாக வேலையை விட்டு அன்பு நின்று விட்டார். அன்பு வேலையை விட்டுப் போனதற்கான காரணம் தெரியாமல் ஆனந்தி புலம்புகிறார். இன்னொரு பக்கம் மித்ரா காயத்ரி மூலமாக ஏதோ சதித்திட்டம் தீட்டுகிறார். சிங்க பெண்ணே சீரியல் 8.86 புள்ளிகளுடன் டிஆர்பி ரேட்டிங்கில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

   

Singapenne serial on suntv | Facebook

 

மூன்று முடிச்சு
சூர்யாவின் கல்யாணம் ஏற்பாடுகள் விமர்சையாக நடைபெறுகிறது. இதுவரை சீரியலில் நந்தினியை மாஸாக காண்பித்தனர் ஆனால் சூர்யாவின் குடும்ப த்தினரிடம் நந்தினி அவமானப்படுகிறார். இதனை அறிந்த சூர்யா அனைவர் மூஞ்சிலையும் கரியை பூசும் விதமாக நந்தினி கழுத்தில் தாலி கட்ட போகிறார். இந்த சீரியல் 8. 71 பிள்ளைகளுடன் TRP ரேட்டிங்கில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

சன் டிவியில் விஜய் டிவி நடிகை நடிக்கும் மூன்று முடிச்சு சீரியல்.. அப்போ டாப் சீரியல் முடியப்போகிறதா | sun tv moondru mudichu serial Actress Swathi new promo - Tamil ...

மருமகள்
பிரபுவுக்கும் ஆதிரைக்கும் திருமணம் நிச்சயமானதிலிருந்து அடுத்தடுத்த பிரச்சினைகள் வருகிறது. திருமணத்தை நிறுத்துவதற்கு பிரபுவின் சித்தப்பா குடும்பத்தினரும் ஆதிரையின் சித்தியும் சதி செய்து வருகின்றனர். மருமகள் சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் 8.58 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

சுந்தரி
அணு உயிரோடு இருக்கிறாரா? சுந்தரிக்கும் வெற்றிக்கும் எப்போது கல்யாணம் ஆகும்? கார்த்திக் நல்லவனாக மாறுவாரா? என பல திருப்பங்களுடன் சுந்தரி சீரியல் ஒளிபரப்பாகிறது. இப்போது சீரியல் கிளைமாக்ஸ் நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இதனால் ரசிகர்கள் விரும்பி பார்க்கின்றனர். 8.52 புள்ளிகளைப் பெற்று TRP ரேட்டிங்கில் சுந்தரி சீரியல் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

முட்டிக்கு மேல் உடை; கிளாமர் போஸ் கொடுத்த சுந்தரி சீரியல் கதாநாயகி!

சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் ஐந்து இடங்களை எப்படியாவது படித்து விடும். ஆனால் இந்த முறை முதல் ஐந்து இடங்களையும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான் பிடித்துள்ளது. இதனால் சிறகடிக்க ஆசை சீரியல் 7.88 புள்ளிகள் உடன் TRP ரேட்டிங்கில் ஆறாவது இடத்தில் உள்ளது