கொரோனா காலகட்டத்திற்கு பிறகு பலர் youtube-ஐ தொடங்கி இருக்கின்றனர். பலருக்கு இன்றைய வருமானம் தரக்கூடிய வாழ்வாதாரமாக கூட இருப்பது யூடியூப் தான். அப்படி யூடியூபின் ராஜா என்று அழைக்கப்படுபவர் மிஸ்டர் பீஸ்ட் ஜிம்மி டொனால்ட்சன் ஆவார். உலகிலேயே அதிகப்படியான சப்ஸ்கிரைப்பர்களை கொண்டவர்தான் ஜிம்மி டொனால்ட்சன்.

அமெரிக்காவை சேர்ந்த ஜிம்மி டொனால்ட்சன் தனது மிஸ்டர் பீஸ்ட் யூடியூப் சேனலில் 239 மில்லியன் சந்தாதாரர்களை கொண்டிருக்கின்றார். இதன் மூலம் அவருக்கு 500 மில்லியன் முதல் 700 மில்லியன் வரை ஒரு ஆண்டிற்கு வருமானம் ஈட்டுகிறார். இந்த ஒரு சேனல் மட்டும் இல்லாமல் இவர் பல சேனல்களை நடத்தி வருகிறார். youtube மட்டுமல்லாமல் பல தொழில்களை செய்து வருகிறார் ஜிம்மி டொனல்ட்சன்.
24 வயதே ஆன ஜிம்மி டொனால்ட்சன் 2017 ஆம் ஆண்டு முதல் youtube பை நடத்தி வருகிறார். youtube மட்டுமல்லாமல் சாக்லேட் விற்பனை, மிஸ்டர் பீஸ்ட் லோகோ பதித்த துணிகள் விற்பனை போன்றவற்றை செய்து வருகிறார். இது மட்டுமல்லாமல் நிறைய தொண்டு காரியங்களையும் செய்து வருகிறார் ஜிம்மி டொனல்ட்சன். மருத்துவமனைகளுக்கு, மரம் நடுவதற்கு, அறுவை சிகிச்சைக்கான பலவிதமான நன்கொடைகளை செய்து வருகிறார்.
இது மட்டுமல்லாமல் தனது youtube-ஐ சப்ஸ்கிரைப் செய்து பார்க்கும் ரசிகர்களுக்கு அவ்வப்போது இலவச கார், பெருமளவில் பணம் என பல பரிசுகளையும் அளித்து வருகிறார் ஜிம்மி டொனல்ட்சன். மிஸ்டர் பீஸ்ட் மட்டுமல்லாது மிஸ்டர் பீஸ்ட் 2, மிஸ்டர் பீஸ்ட் கேமிங், மிஸ்டர் பீஸ்ட் ஷார்ட்ஸ், பீஸ்ட் ரியாக்ட்ஸ் ஆகிய சேனலை நடத்தி வருகிறார்.

இப்படி யூடியூபில் புகழ்பெற்று யூடியூபிற்கு அரசனாக திகழ்ந்துவரும் ஜிம்மி டொனல்ட்சன் ஒரு புதுவித செயலை செய்திருக்கிறார். அது என்னவென்றால் ஜிம்மி டொனால்ட்சன் தான் இறந்த பிறகும் தனது சேனல் ஆக்டிவாக இருக்க வேண்டும் என்பதற்காக 15 வீடியோக்களை தனியாக தயார் செய்து அதை முன் பதிவாக செய்து வைத்திருக்கிறாராம். இது அவரது ரசிகர்களுக்கு youtube மீது அவருக்கு இவ்வளவு ஒரு தொழில் பக்தியா என்று பேசி வருகின்றனர்.
