மன நலம் சரி இல்லாம பண்றாரா..? திடீரென்று பயில்வான் குறித்து வெங்கடேஷ் பட் வெளியிட்ட வீடியோ..!!

By admin on ஐப்பசி 5, 2024

Spread the love

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் வெங்கடேஷ் பட். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார். சமீபத்தில் தான் அந்த நிகழ்ச்சி முடிவடைந்தது. இந்த நிலையில் பிரபல சினிமா விமர்சகரான பயில்வான் ரங்கநாதன் நடிகர், நடிகைகள் குறித்து யூடியூப் சேனலில் பேசுவார். அந்த வகையில் குக் வித் கோமாளி நான்கு சீசனில் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் ஐந்தாவது சீசன் தொடங்கப்படுவதற்கு முன்னரே அதிலிருந்து விலகி விட்டார்.

Latest Tamil Cinema | Kollywood News | Latest Tamil Movies | Tamil Cinema Reviews | Tamil Movie Gossips | சினிமா நியூஸ் | chef Venkatesh Bhat | Tamil Cinema News

   

அப்போது மீடியா மேஷன்ஸ் நிறுவனம் எங்கு இருக்கிறது அங்குதான் நான் இருப்பேன் என வெங்கடேஷ் பட் ஏற்கனவே விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையில் பயில்வான் ரங்கநாதன் வெங்கடேஷ் பட் கோடிக்கணக்கில் சம்பளம் கேட்டதாகவும், அதற்கு விஜய் டிவி மறுத்ததால் தான் அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாகவும் பேசினார். அதனை பார்த்த வெங்கடேஷ் பட் ரசிகர்கள் பயில்வான் ரங்கநாதனை  திட்டி தீர்த்தனர்.

   

 

நேற்று வெங்கடேஷ் பட் தனது சமூக வலைதள பகுதியில் ஒரு வீடியோவை வெளியிட்டார். பொது வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம். ரங்கநாதன் எதற்காக இப்படி பேசுகிறார் என்று தெரியவில்லை. அவருக்கு மனநிலை சரியில்லாமல் போய்விட்டதா அல்லது பணத்துக்காக இப்படி பேசுகிறாரா என்று தெரியவில்லை. எது எப்படியோ நம்மை பற்றி ஒருவர் தவறாக பேசிவிட்டார் என்றால் அவரைப் பற்றி நாமும் அதேபோல தவறாக பேச வேண்டும் என்று அவசியமில்லை.

 

View this post on Instagram

 

A post shared by Venkatesh Bhat S (@chefvenkateshbhat)

எனது ரசிகர்கள் தயவு செய்து அவரை போலவே நீங்களும் தவறாக பேச வேண்டாம். சாக்கடையில் கல்லை தூக்கி எறிந்தால் அது நம் மீது விழத்தான் செய்யும். இல்லாதது, நடக்காததை பற்றி அவர் பேசுகிறார். நம் அதற்கு பதிலளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நமது வேலையை பார்த்து போய்விட்டால் இப்படிப்பட்டவர்கள் அடுத்தவர்களை பற்றி பேசுவதை குறைத்து விடுவார்கள். தலைவர் ஸ்டைலில் நம்ம நம்ம வேலையை பார்ப்போம் என அந்த வீடியோவில் பேசியுள்ளார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.