சின்னத்திரை சீரியல்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருவதால் சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற முன்னணி சேனல்கள் அதிக அளவிலான சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன. முன்பெல்லாம் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே ஒளிபரப்பாகி வந்த சீரியல்களுக்கு தற்போது டிமாண்ட் அதிகரித்துள்ள காரணத்தால் 7 நாட்களும் ஒளிபரப்பி வருகிறார்கள். ஒரு சீரியல் எந்த அளவு மக்கள் மத்தியில் வரவேற்பு பெறுகிறது என்பதை டிஆர்பி மூலம் தான் கண்டறிய முடியும். அதன்படி இந்த வாரத்திற்கான டாப் 10 சீரியல்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் விஜய் டிவி சீரியல்கள் மளமளவென முன்னுக்கு வந்துள்ளன.
மூன்று முடிச்சு:
மூன்று முடிச்சு சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் மூன்றாம் இடத்திலிருந்து இந்த வாரம் முதல் இடத்தை பிடித்துள்ளது. சீரியலில் நந்தினி மற்றும் சூர்யா திருமணம் முடிந்துவிட்ட நிலையில் இனி சூர்யா அம்மா என்ன செய்வார் என்ற கதைகளத்தை நோக்கி சீரியல் நகரும் என தெரிகிறது.
சிங்க பெண்ணே:
வாரம் வாரம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் சிங்க பெண்ணே சீரியல் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. குடும்ப சூழ்நிலைக்காக கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து கார்மென்ஸில் ஆனந்தி வேலை செய்து கொண்டிருக்கிறார். அங்கு அவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாக வைத்து சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
கயல்:
எப்போதுமே டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கும் கயல் சீரியல் இந்த வாரம் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. தனது குடும்பத்திற்காக எல்லா சந்தோஷத்தையும் இழந்து போராடும் ஒரு பெண்ணின் கதை தான் இது.
சுந்தரி:
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த தொடர்களில் சுந்தரி சீரியலின் முதல் பாகத்தை முடித்துவிட்டு இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி இருந்தது. கடந்த சில மாதங்களாக பின்னுக்கு தள்ளப்பட்ட இந்த சீரியல் இந்த வாரம் நான்காம் இடத்தை பிடித்துள்ளது.
மருமகள்:
கடந்த வாரம் மூன்றாம் இடத்திலிருந்து மருமகள் சீரியல் இந்த வாரம் ஐந்தாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து ராமாயணம் தொடர் ஆறாம் இடத்தையும், விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் ஏழாவது இடத்தையும், பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி மற்றும் ஆஹா கல்யாணம் ஆகிய சீரியல்கள் அடுத்தடுத்த இடத்தையும் பிடித்துள்ளன.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…